Surya41

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

சூர்யா தனது 40 படத்தின் காட்சிகளை நடித்து முடித்துள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையில் சிவாவுடன் ஜோடி சேரவுள்ளார்

டான்

டான் படத்தின் டப்பிங் பணியை முடித்தார் சிவகார்த்திகேயன்

முகேஷ் அம்பானி வீட்டிற்கு வந்த மர்ம நபர்களால் பதற்றம் போலிஸ் குவிப்பு

முகேஷ் அம்பானி வீட்டிற்கு அருகே இரண்டு மர்ம நபர்கள் நடமாடிச் சென்றுள்ளன.

கால் டாக்சி  டிரைவரிடம் அம்பானியின் வீட்டு விலாசத்தை விசாரித்துள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த கால் டாக்சி டிரைவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்

அங்கு உடனே விரைந்த காவல் துறையினர் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்

கடந்த பிப்பரவரி மாதம் அங்கு ஒரு காரில் வெடிபொருட்கள் நிறப்ப பட்டு நின்று கொண்டிருந்தது

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த மாவட்டங்கள்????

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சில மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்படுள்ளது.அதன் மூலம் இராமநாதபுரம் கடலூர் தஞ்சாவூர் விருதுநகர் நாகப்பட்டினம்….பின்வரும் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி இரண்டிற்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருநெல்வேலி மதுரை சிவகங்கை புதுக்கோட்டை

தளவானூர் அணையில் உடைப்பு

தொடர் மழை காரணமாக   விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அணையில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அங்கிருந்து நீர் வெளியேறிய வண்ணம் உள்ளது

மீண்டும் தாண்டவமாடும் கொரோனா

கோயம்புத்தூரில் அன்னூர் அருகே, சொக்கட்டாம் பள்ளி கிராமம் உள்ளது. இங்கு 6ம் தேதி நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதில் 7ம் தேதி ஒன்பது பேருக்கும், நேற்று 12 பேருக்கும் தொற்று உறுதியானது. சிறிய கிராமத்தில் மூன்று நாட்களில், 25 பேருக்கு தொற்று உறுதியானதால், அங்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.இதனிடையே அந்த கிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது