105 வயதில் பத்மஸ்ரீ விருது வென்ற பாப்பம்மாள்

இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து வரும் கோவையை சேர்ந்த பாப்பம்மாள் அம்மா

தனது 105 வயதிலும் உழைத்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அம்மா

தேசிய விருது விழாவில் கலந்து கொண்ட 105 வயது மதிக்கத்தக்க பாப்பம்மாளின் சேவையை கவுரவிக்கும் வகையில் நமது இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து அவரை மேலும் ஊக்கமடையச் செய்துள்ளது.

இது தமிழர்களையும் இயற்கை விவசாயத்தையும் மேலும் பெருமைப் படுத்தும்

மலேசிய தமிழரான நாகேந்திரனுக்கு மரண தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு கிடைக்குமா??

மலேசியாவைச் சேர்ந்த தமிழரான நாகேந்திரனுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி அவரது தாயார் மேல் முறையீடு செய்துள்ளார்

மலேசியாவை சேர்ந்த தமிழர் நாகேந்திரன் 2009 ஆம் ஆண்டு 42.7 கிராம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றுள்ளார்.வுட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் பரிசோதனையின் போது அவர் பிடிபட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டார்

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2010 ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது

தற்போது 33 வயதாகும் அவருக்கு மனநிலை சரியில்லை என்று நாகேந்திரன் தரப்பு வழக்குரைஞர் ரவி மனு ஒன்றை தாக்கல் செய்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்க்க் கோரி சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்

ஆனால் அவருக்கு அது போன்ற எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்று நீதிமன்றம் அந்த மனுவை ரத்து செய்து தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது

தண்டனையின் பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க நேரும் சமயத்தில் இந்த பெருந்தொற்று காலத்தின் முன்னெச்சரிக்கையாக நாகேந்திரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உருதியானது இதனால் அவரின் தண்டனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

இந்நிலையில் மீண்டும் நாகேந்திரனுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது

நாகேந்திரனின் மனநலனை கருத்தில் கொண்டு அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு கிடைக்குமா

பிரான்ஸ் மியூசியத்தில் பாட்ஷா பெயர் பொறித்த தங்கநாணயம்

பிரான்சின் புகழ்பெற்ற ஒரு மியூசியத்தில் தங்க நாணயம் ஒன்றில் இந்திய நடிகரான புகழ் பெற்ற பாலிவுட் பாட்ஷா அவ்களின் உருவம் மற்றும் பெயர் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது

பாலிவுட் பாட்ஷா,கிங் ஆஃப் பாலிவுட்,கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கே இப்படி புகழ் சேர்ந்துள்ளது

இது அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே பெருமைபட வைத்துள்ளது

சிஆர்பிஎப் வீரர்கள் 4பேர் பலி

சிஆர்பிஎப் வீரர்கள் 4பேர் பலி மற்றும் 7பேர் உடல் கவலைக்கிடம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு முகாமில் சஞ்சய் ரஞ்சன் என்கிற வீர்ர் சக வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஏற்பட்டதன் விளைவே

சிஆர்பிஎப் ன் 50வது பிரிவில் பணியாற்றி வரும் இந்த சஞ்சய் நேற்று இரவு 3 மணி அளவில் தன்னுடன் தூங்கி கொண்டிருந்த வீரர்கள் மீதே இந்த கொலைவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்

இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை

யுனிவர்சல் பாஸின் கடைசி விருப்பம்

கிரிக்கெட் உலகின் பாஸ் கிரிஸ் கெயில் ஓய்வு என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான்

ஆனால் கெயில் தாம் இன்னொரு உலகக்கோப்பை போட்டியிலும் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்

டி20 உலகக்கோப்பை நடந்து வரும் வேளையில் மேற்கிந்திய தீவுகள் அணி சரியாக விளையாடாத இந்த நேரத்தில் சீனியர் பிளேயர்கள் அணியை விட்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

அதிலும் முக்கியமாக பாஸ் கெயில் தனது ஓய்வறிக்கையை தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் தாம் இன்னொரு உலக கோப்பை ஆட விரும்புவதாகவும் தெரிவித்தார்

டி20 உலகக்கோப்பை ஆட்டம் ஆரம்ப நிலையிலிருந்தே தனது தந்தை உடல்நிலை சரியில்லை என்றும் தம்மால் சரியாக கவனம் செலுத்த இயலவில்லை என்றும் தெரிவித்தார்

சிவகார்த்திகேயன் டான் பர்ஸ்ட்லுக் ரிலிஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் டான்

இதனை தொடர்ந்து sk ப்ரொடக்‌ஷன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து வழங்கும் டான் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த சிவா நாளை தமது டான் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்

மளிகை கடையில் கொலை செய்யப்பட்ட பெண்

விருதுநகரில் பெண் ஒருவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்

விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் அவரது மனைவி ராணி இவர்களுக்கு வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்

கொலையுண்ட ராணி சம்பவத்தன்று தனது மளிகைகடையில் இருந்துள்ளார் அவரது கணவர் வெளியே சென்றிருந்த அந்த நேரத்தில் கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்

கமலுடன் கைகோர்க்கும் ரஞ்சித்

தமிழகத்தின் மிகப்பெரும் நடிகரான கமல்ஹாசன் அடுத்ததாக ரஞ்சித் உடன் கைகோர்க்க இருக்கிறார்

தற்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அடுத்ததாக மலையாள படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார் கமல்ஹாசன்

இதன் பின்னர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன

சூட்கேஸில் இளம்பெண் சடலம்.காவல்துறையினர் சஸ்பெண்ட் ஏன்????

சேலத்தில் இளம்பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த காவலர்கள் 4பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது காவல்துறை

சடலமாக கிடைக்கப் பெற்ற அந்த பெண்ணின் மொபைல் கால்களை பரிசோதித்தலில் அந்த 4காவலர்களும் இளம்பெண்ணுடன் பலமுறை பேசியுள்ளது தெரிய வந்துள்ளது

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை

கி வீரமணிக்கு கொரோனா தொற்று

திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

88வயதான வீரமணி கொரோனா காரணமாக பயணங்களை தவிர்த்து வந்தார்.தொற்று குறைந்துள்ளதால் தற்போது மீண்டும் இரயில் பயணம் மேற்கொண்ட அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தொற்று உருதியாகியுள்ளது

சென்னையில் உள்ள அப்போல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்