பெரு நகரில் உள்ள ஒரு தம்பதியினர் தான் ஆசையாக வளர்க்க செல்லப்பிராணியான நாய் ஒன்றை வாங்கியுள்ளனர்
அந்த நாய்க்கு ரன் ரன் என்று செல்லமாக பெயர்சூட்டப்படு வளர்த்தும் வந்துள்ளனர்
ஆனால் அக்கம் பக்கத்தினர் அந்த நாய் மற்ற அனைத்து விலங்குகளையும் தாக்கி உள்ளது.இதில் சந்தேகமடைந்தவர்கள் புகார் அளித்த நிலையில் அது ஆண்டியன் வகை நரி என்றும் அமேசான் நதிகளில் இருந்து திருடப்பட்டு விற்பனை செய்து வந்த்து தெரிய வந்துள்ளது
இலங்கையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் இலங்கையில் வாழ்வது பாதுகாப்பற்றது எனவும், சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ நிரந்ததங்கும் அனுமதி அடைந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடவுச்சீட்டைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த வாரம் கல்பிட்டி கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஜுன் மாதம், கனடாவுக்கு கடற்பயணம் மேற்கொள்ளும் நோக்குடன், கர்நாடகா மாநிலம் மங்களூரில் தங்கியிருந்த நிலையில் இவ்வாறான குழு ஒன்றை இந்திய பொலிஸார் கைது செய்திருந்தனர்.
தமிழக போலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி 38 இலங்கையர்களும் அவர்களுக்கு உணவு வழங்கிய ஆறு இந்தியர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களை கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக கடத்தல்காரர்கள் ஒரு மில்லியன் இலங்கை ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட 30 இளைஞர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர்.
குழு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறுதல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கடந்த 9ம் தேதியன்று ஹவுகாங் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து இறங்க நினைத்த மூதாட்டி இறங்கும் முன்னரே பேருந்து ஓட்டுநர் தானியங்கி கதவிகளை இயக்கினார்
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த மூதாட்டிக்கு உடனே உதவிய மற்ற ஓட்டுநர் அவரை உடனடியாக மருத்துவ உதவிக்கு அனுப்பினர்
கன்னட திரை உலகின் சூப்பர்ஸ்டார் புனித்ராஜ் குமாரின் இறப்பு கர்நாடகாவையும் தாண்டி தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது
புனித்ராஜ் குமார் தனது 46வது வயதிலேயே தமது நிஜவாழ்க்கையை நிவர்த்தி செய்து நம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார்
இதனிடையே தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70 வயதில் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
அந்த சமயத்தில் புனித்ராஜ் குமார் இறப்பை இரண்டு நாட்கள் கழித்து தாம் அறிந்த்தாகவும் அதனால் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயன் தனது டாக்டர் படத்தை வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்
அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தையும் அவரே தயாரித்து வெளியிட உள்ளார்
இதனிடையே சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் வெற்றியை கொண்டாடி முடிப்பதற்கு முன்னரே தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் தேதியை அறிவித்து சொன்னதே போலவே வெளியிட்டுள்ளார்