மலேசியாவைச் சேர்ந்த தமிழரான நாகேந்திரனுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி அவரது தாயார் மேல் முறையீடு செய்துள்ளார்
மலேசியாவை சேர்ந்த தமிழர் நாகேந்திரன் 2009 ஆம் ஆண்டு 42.7 கிராம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றுள்ளார்.வுட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் பரிசோதனையின் போது அவர் பிடிபட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டார்
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2010 ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது
தற்போது 33 வயதாகும் அவருக்கு மனநிலை சரியில்லை என்று நாகேந்திரன் தரப்பு வழக்குரைஞர் ரவி மனு ஒன்றை தாக்கல் செய்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்க்க் கோரி சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்
ஆனால் அவருக்கு அது போன்ற எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்று நீதிமன்றம் அந்த மனுவை ரத்து செய்து தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது
தண்டனையின் பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க நேரும் சமயத்தில் இந்த பெருந்தொற்று காலத்தின் முன்னெச்சரிக்கையாக நாகேந்திரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உருதியானது இதனால் அவரின் தண்டனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
இந்நிலையில் மீண்டும் நாகேந்திரனுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது
நாகேந்திரனின் மனநலனை கருத்தில் கொண்டு அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு கிடைக்குமா